பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடனே டெல்லி வரவேண்டுமென கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து, கட்சியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார்.
இந்தசூழலில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடனடியாக டெல்லி வர பா.ஜ.க தலைமை அவசர அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பின் பேரில் இன்றிரவு நயினார் நாகேந்திரன் டெல்லி கிளம்பவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.









