அண்ணாமலை நாளை டெல்லி பயணம்?

Published On:

| By Monisha

annamalai going to delhi tomorrow

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை (ஆகஸ்ட் 6) டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய நடைப்பயணம் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருப்பத்தூர், மேலூர், மதுரை என தொடர்ந்து வருகிறது.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் அண்ணாமலை இன்று நடைப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் நாளை அண்ணாமலை டெல்லிக்கு செல்ல உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் மீண்டும் மோதல் அதிகரித்துள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் அழைப்பின் பேரில் நாளை ஒரு நாள் நடைப்பயணத்தை நிறுத்தி வைத்துவிட்டு   டெல்லி செல்ல உள்ளதாக பாஜக திறப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோனிஷா

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3!

அமைச்சரிடம் சீறிய ஸ்டாலின் : மா.செ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share