அண்ணாமலை கொண்டு போன ஃபைல்!

Published On:

| By Selvam

annamalai delhi files

பாஜக கூட்டணியை அதிமுக முற்றிலுமாக முறித்துக் கொண்டதை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி தலைமையால் டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

நேற்று (அக்டோபர் 1) மாலை டெல்லி சென்றடைந்த அண்ணாமலையால் கட்சி தலைவர்களை சந்திக்க இயலவில்லை. காரணம் மத்திய பிரதேச தேர்தல் தொடர்பான ஆலோசனையில் கட்சி தலைவர்கள் இருந்தனர். அந்த கூட்டம் இரவு 11.30 மணியளவில் தான் முடிந்திருக்கிறது. நேற்று இரவு தேஜஸ்வி சூர்யா எம்.பி வீட்டில் அண்ணாமலை தங்கியிருந்தார்.

ADVERTISEMENT

இரவு முழுவதும் தான் வைத்திருந்த புள்ளி விவரங்களை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தாராம். அந்த புள்ளி விவரங்கள் சொல்வது என்னவென்றால், தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு எதிரான ஓட்டு வங்கிகளை ஒருங்கிணைத்து சென்றால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்பது தான். இதை கட்சி தலைமையிடம் சொல்லி பாஜக தலைமையில் கூட்டணி அமைப்பது தான் அவரது நோக்கம்.

ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டு ஒரு அறிக்கையை டெல்லி தலைமையிடம் தந்திருக்கிறாராம்.

ADVERTISEMENT

அதில் ‘திமுக, அதிமுகவை கடுமையாக எதிர்த்தால் நாளை யார் நம்மை ஆதரிப்பார்கள். இருவரில் யாராவது ஒருவருடன் கூட்டணி அமைத்தால் தான் எம்.பி தேர்தலில் சீட்டை பெற முடியும். அதனால் அதிமுகவுடன் நட்புடன் கூட்டணி அமைத்து செல்வது தான் பலன் தரும்’ என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்.

அகில இந்திய பாஜக தலைவர்கள் ஜே.பி.நட்டா, அமித்ஷா யாருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள் என விரைவில் தெரிய வாய்ப்பிருக்கிறது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காந்தி ஜெயந்தி: ஆளுநர், முதல்வர் மரியாதை!

கலையரங்கம், மானியம், விருது: கோரிக்கைகள் வைத்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share