அண்ணாமலை தோல்வி: மொட்டையடித்த பாஜக தொண்டர்!

Published On:

| By indhu

Annamalai defeat: BJP worker who lost in the key and got shaved!

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணாமலை தோல்வியடைந்ததால், பாஜக தொண்டர்  மொட்டையடித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றது.

கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் போட்டியிட்டனர்.

ஜூன் 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின் படி, அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று 1,17,561 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மொட்டையடித்த பாஜக தொண்டர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி முந்திரிதோட்டம் பகுதியை சேர்ந்த பாஜக தொண்டர் ஜெயசங்கர். இவர், உடன்குடியில் பாஜகவின்,  மத்திய அரசின் நலத்திட்ட பிரிவின் ஒன்றிய செயலாளராக உள்ளார்.

“அண்ணாமலை கோவையில் தோற்றால் நான் மொட்டை அடித்து, மீசையை மழித்துக் கொள்கிறேன்” என அதிமுக மற்றும் விசிகவினரிடம் பந்தயம் கட்டி உள்ளார் ஜெய்சங்கர்.

இந்நிலையில், அண்ணாமலை கோவை தொகுதியில் தோற்றதால், பந்தயத்தில் தோற்ற ஜெயசங்கர் மொட்டையடித்து, மீசையை மழித்துக் கொண்டார்.

இது தொடர்பாக பேசிய அவர், “அண்ணாமலை கோவை தொகுதியில் தோற்றால் மொட்டையடித்து, மீசையை மழித்துக் கொள்வதாக விசிகவை சேர்ந்த முத்துச்செல்வம், அதிமுகவை சேர்ந்த சிவராஜன் ஆகியோரிடம் பந்தயம் கட்டினேன். அண்ணாமலை தேர்தலில் தோற்றதால் மொட்டையடித்து, மீசையை மழித்துக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி பஜாரில் வைத்து மொட்டையடித்து, மீசையை மழித்த ஜெயசங்கர், பந்தயத்தின்படி பஜாரை சுற்றி வந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவுக்கு சங்கர் வழக்கு : அதிரடியாக கேள்வி எழுப்பிய நீதிபதி!

”திட்டமிட்ட சூழ்ச்சியால் விஜய பிரபாகரன் வீழ்த்தப்பட்டுள்ளார்” : பிரேமலதா குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share