பரந்தூர் விமான நிலையம்: பாஜக நிலைப்பாடு என்ன?

Published On:

| By Prakash

“அரசியல் லாபத்துக்காக மக்களைத் திசை திருப்பாமல் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும்” என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 27) அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று நமது மாநிலம் போற்றப்பட்ட காலங்கள் போய் வந்தாரை விரட்டும் தமிழ்நாடு என்றானதற்கு திமுகவுக்கு பெரும் பங்குள்ளது.

திமுக ஆட்சியின் கடந்த ஓர் ஆண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மாற்று குடியிருப்புகள் கொடுப்பதற்கு முன்பு வீடுகள் இடிக்கப்பட்டதை பரந்தூர்வாசிகள் பார்த்திருப்பார்கள்.

ADVERTISEMENT

அதனால்தான் இன்று திமுக அரசு நிலத்தை வழங்குகிறோம், இழப்பீடு கொடுக்கப்படும் எனக் கூறும் வாக்குறுதிகள் எவற்றையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த திமுக அரசு, பரந்தூர் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றும் என்று அந்த மக்கள் எப்படி நம்புவார்கள்?

ADVERTISEMENT

அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும்.

அவர்களுக்குச் சரியான குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் புது விமான நிலையத்துக்கு நிலங்கள் வழங்க ஒப்புதல் கேளுங்கள்.

தமிழகத்தில் குறைந்துவரும் முதலீடுகளைக் கண்டபிறகாவது இனியும் அரசியல் லாபத்துக்காக மக்களைத் திசை திருப்பாமல் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

‘வாழ்வாதாரம் பாதிக்கும்’: பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share