“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தினை குறிப்பிட்டு அலங்கார வார்த்தைகளால் மக்களை ஏமாற்றுவதை எப்போது நிறுத்தும் திமுக?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்கள்” கீழ் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 13) வீடியோ பதிவிட்டிருந்தார். அதில் அந்த திட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட பல்வேறு பலன்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற ஒரு திட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
குழந்தைகளுக்கான ஊட்டச் சத்தை உறுதி செய்ய வேண்டுமானால், பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வரும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை, ஒழுங்காகப் பயன்படுத்தினாலே போதுமானது.
புதியதாகப் பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும்.
பிரதமர் மோடி கொண்டு வந்த போஷான் அபியான் திட்டம் மூலம், கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, ₹2936 கோடி ரூபாய். சராசரியாக வருடத்திற்கு ஐம்பது லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைகிறார்கள்.
ஒரு புறம், பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை உட்பட தரமற்ற உணவு வழங்கிக் கொண்டு, மற்றொரு புறம், அலங்கார வார்த்தைகளால் மக்களை ஏமாற்றுவதை எப்போது நிறுத்தும் திமுக?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செஸ் உலகக்கோப்பை: தமிழக வீரர் குகேஷ் காலிறுதிக்கு முன்னேற்றம்!
