”மத்திய அமைச்சர் அமித் ஷா வரவேற்பு போஸ்டரில் நடிகர் சந்தான பாரதி புகைப்படம் ஒட்டப்பட்ட சம்பவத்தில் திமுக தான் கேவலப்பட்டு நிற்கிறது” என அண்ணாமலை தெரிவித்துள்ளார். annamalai attack dmk on santhana bharathi poster
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56-ஆம் ஆண்டு தொடக்க தின விழா இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

இதற்கிடையே அமித் ஷாவை வரவேற்று ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்டிருந்த பாஜகவினரின் போஸ்டர்களில் ஒன்று இணையத்தில் வைரலானது.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி பெயரில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இந்த புகைப்படம் காலை முதலே மற்ற கட்சியினரால் கடும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளானது.

புகார் அளித்துள்ளேன்! annamalai attack dmk on santhana bharathi poster
இந்த நிலையில் மாலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக அருள்மொழி கூறுகையில், “அந்த சுவரொட்டிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை நான் ஒட்டவில்லை. என் பெயரை மிஸ் யூஸ் செய்துள்ளனர். அமித் ஷாவையும், என்னையும் அவமானப்படுத்துவதாக நினைத்து இதை செய்துள்ளனர்.
அதை யார் செய்தார்களோ, அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் வேண்டும் என்பதற்காக தான் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட போஸ்டர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
திமுகவினர் தான் ஒட்டியுள்ளனர்!annamalai attack dmk on santhana bharathi poster
அதற்கு அவர், “பாஜகவினரால் ஒட்டப்படும் போஸ்டர்களில் ஒரு நெறிமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தேசியத் தலைவர், மாநிலத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோரின் புகைப்படம் இடம்பெற்று இருக்கும். அப்படி தான் அமித் ஷாவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் அமித் ஷாவை அவமானப்படுத்தும் நோக்கில் திமுகவினர் தான் குறிப்பிட்ட போஸ்டரை ஒட்டியுள்ளனர். இதன்மூலம் திமுக தான் கேவலப்பட்டு நிற்கிறது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என அண்ணாமலை தெரிவித்தார்.