தமிழக போலீசுக்கு அண்ணாமலை பாராட்டு… ஏன்?

Published On:

| By Selvam

annamalai appreciate tamilnadu police

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் முதிய தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை காவல்துறை கைது செய்ததற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (மே 19) பாராட்டு தெரிவித்துள்ளார். annamalai appreciate tamilnadu police

கடந்த மே 1-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில், வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி, பாக்கியம் ஆகியோரை கொலை செய்து, அவர்களிடம் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

annamalai appreciate tamilnadu police

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சிவகிரியில் கடந்த மே 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால், மே 20-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கில் 12 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“ராமசாமி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். annamalai appreciate tamilnadu police

இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில் பாஜக சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக காவல்துறை, அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். annamalai appreciate tamilnadu police

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share