ஆளுநர் உத்தரவு… அண்ணா பல்கலையில் அதிரடி மாற்றம்!

Published On:

| By Selvam

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரியும், பாவேந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு செயலாளர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள ஆணையில், “நிர்வாக நலன் கருதி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் உதவி இயக்குநர் கலையரசன் அயற்பணியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரியும் பாவேந்தன் பணியிடத்தில் உதவி இயக்குநர் நிலையில் பணியமர்த்தம் ஆணையிடப்படுகிறது. ஆளுநரின் உத்தரவின்படி, இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share