பொறியியல், தொழில் நுட்பம் சார்ந்த கல்லூரிகளில் சேர அண்ணா பல்கலைக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. Anna University invites applications
அண்ணா பல்கலைக் கழகத்தின் பல்கலைக்கழக வளாகங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி பி.இ., பி.டெக், பி.பிளான் பட்டப்படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் படிவங்கள் 2025-26-ம் ஆண்டு வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகத்தின் சேர்க்கைக்கான மையம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள், கல்வி ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் மூலம் வரும் 9.6.2025க்குள் சமர்ப்பிக்கலாம்.
இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு https://cfa.annauniv.edu/cfa/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். Anna University invites applications