அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையில்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பு வழங்கியுள்ளது. anna university case gnana sekar get lifetime jail
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதில் 11 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28ஆம் தேதி தீர்ப்பளித்தார். மேலும் தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி புழல் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட ஞானசேகரன், இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து சரியாக 10.40 மணிக்கு நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பை வாசித்தார்.
அப்போது குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.