லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் ஜனவரி 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, அவரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தது.
இதனையடுத்து அங்கித் திவாரி ஜாமீன் கேட்டு திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அங்கித் திவாரியை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையவிருந்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா முன்பு கணொளி காட்சி வாயிலாக இன்று (ஜனவரி 11) ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 24 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
இடைக்கால தடை நீக்கம்: திட்டமிட்டபடி வெளியாகிறது அயலான்!
வாய்ப்பிருந்தால் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பேன் : எடப்பாடி பழனிசாமி