ரஜினியாக உருமாறி ’சிக்கிட்டு வைப்’ செய்த டி.ராஜேந்தர்… அனிருத்… சாண்டி!

Published On:

| By christopher

anirudhu tr and sandy in chikitu vibe like rajini

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என பலர் நடித்துள்ளனர். anirudhu tr and sandy in chikitu vibe like rajini

படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது. இந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளதால், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இசையில் கூலி படத்தின் முதல் சிங்கிளான ’சிக்கிட்டு வைப்’ கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில் சிக்கிட்டு வைப் முழு பாடலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் இன்று (ஜூன் 25) வெளியிட்டது.

ADVERTISEMENT

பாடல் வரிகளை தெருக்குரல் அறிவு எழுதியுள்ள நிலையில், அனிருத், டி.ராஜேந்தர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

மியூசிக் வீடியோவில் அனிருத், டி.ராஜேந்தர் மற்றும் சாண்டி உட்பட அனைவருமே ரஜினி ஸ்டைலில் சிக்கிட்டு பாடலுக்கு ஆடி வைப் செய்துள்ளனர். இந்த பாடல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Chikitu - Official Music Video | COOLIE | Superstar Rajinikanth | Sun Pictures | Lokesh | Anirudh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share