நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கொலவெறி காம்போ!

Published On:

| By Balaji

தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் பட்டாஸ் திரைப்படத்தில் இடம்பெறும் பாடலை அனிருத் பாடியுள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பட்டாஸ். பொங்கல் ரிலீசாக வரும் ஜனவரி 16ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் சில் ப்ரோ, மொரட்டு தமிழன் ஆகிய இரு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்த பாடல் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விவேக் – மெர்வின் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு, தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளியான ‘3’ திரைப்படம் மூலமாகத்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெறும் ‘கொலவெறி’ பாடல் 207 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூபில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, மாரி போன்ற திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய அவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக எந்தப் படத்திலும் இணையவில்லை. இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் படத்தில் அனிருத் பாடியிருக்கும் தகவல் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.

ADVERTISEMENT

அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் திரைப்படத்தில் சினேகா, மெஹ்ரின் பிர்சடா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முனிஸ்காந்த் , ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share