“அனிமல்” : 11 நாள் வசூலே இவ்வளவா?

Published On:

| By Kavi

Animal Movie 11th Day Box Office Collection

இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 01 ஆம் தேதி வெளியான  “அனிமல்” படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் இன்று வரை வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

நேற்று அனிமல் படம் வெளியாகி 10ஆவது நாளில் உலக அளவில் 717.46 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று டிசம்பர் 12 ஆம் தேதி அனிமல் படம் வெளியாகி 11 நாளில் உலக அளவில் 737.98 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அனிமல் படம் வெளியாவதற்கு முன்பாகவே இந்த படத்தின் நீளம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்று அறிவிக்கப்பட்ட போது இந்த படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வரமாட்டார்கள், பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்க முடியாது என்று பலரும் கூறினார்கள்.  தற்போது ரசிகர்களின் ஆதரவால் அனிமல் படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT

இன்னும் ஒரு வாரத்திற்குள் அனிமல் படம் நிச்சயமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓடும் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது!

”நான் ஏன் தலைமறைவாகனும்?” : நேரில் ஆஜரான ஆர்.கே.சுரேஷ் கேள்வி!

’சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் பிறந்தநாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

ரூ.46 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share