ADVERTISEMENT

அனில் சவுகானுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு

Published On:

| By Prakash

முப்படைகளின் தலைமை தளபதியான அனில் சவுகானுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, அவர் மனைவி உட்பட 13 பேர் நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவரது மறைவுக்குப் பிறகு, கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக, முப்படை தலைமைத் தளபதி பதவி காலியாகவே இருந்தது.

இந்த நிலையில்தான், ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகானை, நாட்டின் இரண்டாவது முப்படை தலைமைத் தளபதியாக மத்திய அரசு கடந்த செப்டம்பர் 28ம் தேதி நியமித்தது.

ADVERTISEMENT

அனில் சவுகான் ராணுவ விவகாரங்கள் துறை செயலராகவும் செயல்படுவார் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி, முப்படைகளின் தலைமை தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

இந்திய ராணுவத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றியிருக்கும் அனில் சவுகான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் விரிவான அனுபவத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முப்படைகளின் தலைமை தளபதியான அனில் சவுகானுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

உளவுத் துறை எச்சரிக்கை : பாதுகாப்பு வளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்!

முத்துராமலிங்கர் தங்கக்கவசம் யாருக்கு?: எடப்பாடி -பன்னீர் மோதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share