ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பணத்தை முறைகேடாக கையாண்டததற்காக அனில் அம்பானி மற்றும் 24 நிறுவனங்களை பங்கு சந்தையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பங்கெடுக்கக் கூடாது என்று பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தடை விதித்துள்ளது.
2018-19 காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்த பணத்தை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான அனில் அம்பானி, அமித் பப்னா, ரவிந்திர சுதால்கர் போன்றவர்கள் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதியை வேறு சில நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதாகக் கூறி முறைகேடாக பரிமாற்றம் செய்துவந்துள்ளனர்.
இந்நிறுவனத்தின் போர்டு ஆஃப் டிரைக்டர்ஸ் அனில் அம்பானி மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் இவ்வாறு பணப்பரிமாற்றம் செய்வது முறைகேடு என்று எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் அம்பானியும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சில முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து பணத்தை அந்த நிறுவனங்களுக்குப் பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.
விசாரணையில் இதைக் கண்டுபிடித்த செபி, அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தை பட்டியலில் உள்ள எந்த நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய நிர்வாகி பொறுப்பிலோ இருக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ள 24 நிறுவனங்களையும் பங்குசந்தையில் இருந்து 5 ஆண்டுகளுக்குத் தடை செய்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மீது ரூ.5 லட்சம் அபராதம், அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான பப்னா மீது ரூ 27 கோடி அபராதம், சுதால்கர் மீது ரூ.26 கோடி அபராதம், ஷா மீது ரூ 21 கோடி அபராதமும் விதித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வாழை, கொட்டுக்காளி…இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் படங்கள்!
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா கே.எல்.ராகுல்?
ஏர் ஃ போர்ஸ் ஓன் தெரியும்… ரயில் ஃபோர்ஸ் ஓன் தெரியுமா? – அசந்து போன மோடி