சிம்புவுக்கு நன்றி சொன்ன பவன் கல்யாண்! பின்னணியில் தாராள குணம்

Published On:

| By Kumaresan M

நிலச்சரிவில் இருந்து வயநாடு மெல்ல மெல்ல மீண்டு பழைய நிலைமைக்கு வரும் நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவின் மிகப் பெரிய நகரமான விஜயவாடா வெள்ளத்தால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டுமென்று இரு மாநில முதல்வர்களும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகளை விவரிக்கவே முடியாது.  தொலைந்து போன உறவுகள், உடைமைகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, செய்வதறியாது நிற்கும் மக்களின்  வேதனையையும் சொல்லி மாள முடியாது.

ஆந்திரா-தெலுங்கானா மக்களுக்கு உதவ பொது நிவாரண நிதிக்கு தெலுங்கு திரைப் பிரபலங்கள் பலரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிம்பு ஆந்திரா-தெலங்கானா மக்களுக்காக  தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.

தெலுங்கு மக்களுக்காக முதலில் உதவி செய்துள்ள தமிழ் சினிமா நடிகர் சிம்பு தான் என்றும் கூறப்படுகிறது.  இதையடுத்து, நடிகர் சிம்புவுக்கு அந்த மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 3 லட்சம் அளித்த நடிகர் சிம்புவுக்கு மனமார்ந்த நன்றி என்றும் இக்கட்டான சூழலில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள் உங்கள் ஆதரவு மாநில அரசின் திட்டங்களை வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஸ்டாலினை எதிர்த்து திருமா மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறாரா?: அமைச்சர் முத்துசாமி பேட்டி!

மகாவிஷ்ணு அறக்கட்டளையில் சோதனை : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share