ண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது. அந்தவகையில், வீட்டிலேயே இந்த ஆந்திர ஸ்டைல் சிக்கன் பிரியாணி செய்து இந்த நாளைச் சிறப்பாக்கலாம்.
**என்ன தேவை?:**
சிக்கன் – அரை கிலோ (துண்டுகளாக நறுக்கவும்)
சீரக சம்பா அரிசி – அரை கிலோ
பச்சை மிளகாய் – 8
(நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 2 (சிறிய சதுர துண்டுகளாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா – ஒரு கட்டு (ஆய்ந்து வைக்கவும்)
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)
பால் – கால் லிட்டர்
(காய்ச்சி ஆறவைக்கவும்)
தயிர் – 100 மில்லி
எண்ணெய் – 50 மில்லி
நெய் – 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், தக்காளி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும். அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.
**[நேற்றைய ரெசிப்பி: ஆந்திர ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்](https://minnambalam.com/public/2022/02/23/1/Andhra-spicy-chicken)**
