பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்கள். nbumani vs ramadoss mla support
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை ராமதாஸ் இன்று (மே 31) சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேவேளையில், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் இன்று இரண்டாவது நாளாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று (மே 30) அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் மயிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சிவக்குமார் கலந்துகொண்டு அன்புமணிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். உடனடியாக சிவக்குமார் அப்பதவியிலேயே தொடர்வதாக நிகழ்ச்சி நடைபெற்ற மேடையிலேயே அன்புமணி அறிவித்தார்.
பாமகவில் உள்ள ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களில் சிவக்குமார் தனது ஆதரவை அன்புமணிக்கு தெரிவித்திருந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ள பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் ராமதாஸுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மொத்தமுள்ள ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் அன்புமணிக்கு ஆதரவாகவும், இரண்டு பேர் ராமதாஸுக்கு ஆதரவாகவும் உள்ளனர். anbumani vs ramadoss mla support