பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி போட்டியிடப் போகும் தொகுதியைப் பூதக்கண்ணாடி வைத்து தேடிவருகிறது உளவுத்துறை. விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களில் அன்புமணியைக் களம் இறக்க முடிவு செய்ததுள்ளது, பாமக தலைமை.
தற்போது, தர்மபுரி மாவட்டம் பாபிரெட்டிபட்டி அல்லது ஜோசியர் சொன்னதுபடி வேலூர் மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் அன்புமணி போட்டியிட முடிவுசெய்து தீவிரமாக வேலைகள் நடந்துவருகிறது. இந்தத் தகவலை அதிமுக தலைமைக்குத் தெரியப்படுத்தியுள்ளது உளவுத்துறை.