எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாமக தலைவர் டாகடர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிசம்பர் 26) சிகிச்சை அளித்தார். anbumani ramadoss treat people
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது. ஆனால் எண்ணூர் பகுதியில் மட்டும் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கசிந்த எண்ணை கழிவு வெள்ளநீருடன் சேர்ந்து குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்தது.
இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள், குறிப்பாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் கழிவால் மூச்சுவிடுவதற்கே சிரமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பசுமைத் தாயகம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமை இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த எண்ணெய் கசிவிற்கு காரணம் யார் என்று அரசு இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எண்ணெய் கசிவு ஏற்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு தான் அரசு இங்கு வந்தது.
அதுமட்டுமில்லாமல் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து சுமோட்டோ வழக்கு தொடர்ந்த பிறகு தான் அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.
எண்ணூர் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த எண்ணெய் கசிவு அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பாதிப்பை கொடுக்கும். பேரிடர் காலத்தில் இது போன்ற கசிவு ஏற்படும். இதற்காக ஆயில் ஸ்பில் கமிட்டி என்று ஒன்று அமைத்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அதனை அமைக்கவில்லை.
இது போன்ற பேரிடர்கள், இயற்கை சீற்றங்கள் காலநிலை மாற்றத்தால் அடிக்கடி வரும். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் வந்தது.
அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் சென்னையில் வெள்ளம் வரும் என்று நான் எச்சரித்திருந்தேன். ஆனால் 8 ஆண்டுகளிலேயே வந்துவிட்டது.
எனவே சென்னையை தாக்குகின்ற அடுத்த பெருவெள்ளம் 5 அல்லது 6 ஆண்டுகளில் வரும். அதற்கு அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது!
அமெரிக்காவில் இளம்பெண்ணுடன் விஷால்: முகத்தை மூடி ஓடும் வீடியோ!
anbumani ramadoss treat people