ADVERTISEMENT

பணி நியமன ஆணை தாமதம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Published On:

| By Selvam

புள்ளியியல் சார்பு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டி.என்.பி.எஸ்.சி நடத்திய ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகிய நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து,

ADVERTISEMENT

பல மாதங்கள் ஆகியும் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இந்த தாமதம் கண்டிக்கத்தக்கது.

anbumani ramadoss condemns tnpsc statistics job offer delay

2021 அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு, 09.01.2022 அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுகளின் முடிவுகள் 22.03.2022 அன்று வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மொத்தமுள்ள 195 புள்ளியியல் சார்பு பணிகளுக்கு 1:5 என்ற விகிதத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது.

கலந்தாய்வில் தகுதியான 195 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அதன்பிறகு இரு மாதங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்த தேவையற்ற தாமதம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஐயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை தேவை. நியமன ஆணை வழங்குவதில் செய்யப்படும் தாமதம் ஐயங்களையே ஏற்படுத்தும். அதற்கு அரசு இடம் கொடுக்கக் கூடாது.

எனவே, புள்ளியியல் சார்பு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு உடனடியாக நியமன ஆணை வழங்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

பார்டர் கவாஸ்கர் போட்டி: விராட் கோலி மீது கபில் தேவ் நம்பிக்கை!

40 நாட்களில் ஒரு லட்சம் பேர் பணி நீக்கம்: இந்தியாவின் நிலை என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share