பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ளது. இந்தநிலையில், பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று பாமக தலைமை நிலையம் இன்று (ஜூன் 10) செய்தி வெளியிட்டுள்ளது. anbumani invites pmk district general council
இதுதொடர்பாக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில்,
“பாமக உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு கட்சி வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட் அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமா 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன
ஜூன் 15 – திருவள்ளூர் ,செங்கல்பட்டு , ஜூன் 16 – காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஜூன் 17 – வேலூர் , திருப்பத்தூர், ஜூன் 18 திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஜூன் 29 – சேலம், தருமபுரி
மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.
சம்பந்தப்பட் வருவாய் மாவட்டத்தில் உள்ள பாமக மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. anbumani invites pmk district general council