அம்மா மீது பாட்டில் வீச்சு… ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு அன்புமணி விளக்கம்!

Published On:

| By Selvam

Anbumani deny Ramadoss accusations

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று (மே 29) செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. அவருக்கு தலைமை பண்பு இல்லை. தன்னுடைய தாய் மீது அன்புமணி பாட்டில் வீசினார்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். Anbumani deny Ramadoss accusations

இந்தநிலையில், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி இன்று (மே 30) ஆலோசனை நடத்தி வருகிறார்.

Anbumani deny Ramadoss accusations

இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, “பாமக என்பது யாருடைய சொத்தும் கிடையாது. பாமக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் தான் என்னை முறையாக தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்” என்றார். Anbumani deny Ramadoss accusations

தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, தாய் மீது பாட்டில் வீசியதாக சொன்ன ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பேசுகையில், “இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது எங்க அம்மா தான். இந்த உலகத்திலேயே அவங்களுக்கு ரொம்ப பிடிச்சது என்னை தான். எங்க அம்மா மீது சின்ன துரும்பு கூட பட விடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். Anbumani deny Ramadoss accusations

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share