பாமக என்பது யாருடைய சொத்தும் கிடையாது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மே 30) தெரிவித்துள்ளார். Anbumani befitting reply to Ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ளது. இந்தநிலையில், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பாமகவின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அன்புமணி பேசும்போது, Anbumani befitting reply to Ramadoss
“பாமகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக ஐந்து மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்ச்சி நடைபெறும். உறுப்பினர் சேர்க்கை பணிகளை மூன்று வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்.
நீங்கள் தான் பாமக. இது யார் சொத்தும் கிடையாது. நீங்கள் இல்லையென்றால் கட்சி கிடையாது. பொதுக்குழுவில் நீங்கள் தான் என்னை முறையாக தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். உங்களுடன் சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனாக நான் செயல்படுவேன். பொறுப்புகள் வரும், போகும். ஆனால், உங்களுடைய அன்பும், பாசமும் தான் நிரந்தரம்.
கட்சியை பலப்படுத்த வேண்டும். சமூகநீதி போராளி மருத்துவர் ஐயா ராமதாஸ் நம் கட்சியை தொடங்கினார். தொடக்கத்தில் அவருடைய கொள்கைகளான சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம் அதை நம் மனதில் நிறுத்தி அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த நாம் களத்தில் வேகமாக இறங்குவோம். அதில் உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக சேர்ந்து இறங்குவேன்.
தமிழகத்தின் வளர்ச்சி தான் நமது இலக்கு. அதை அடைவதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நமக்குள் எந்த வேற்றுமையும் இருக்கக்கூடாது” என்று தெரிவித்தார். Anbumani befitting reply to Ramadoss
