பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வருகிறார். அவர்கள் அப்பதவியிலேயே தொடர்வதாக அன்புமணி அறிவித்து வருகிறார்.
இன்று (மே 30) காலை பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டு, புதிய பொருளாளராக திருப்பூர் அன்சூர் உசேன் நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால் திலகபாமா, பாமகவின் பொருளாளராக தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என அன்புமணி அறிவித்தார்.

இதேபோல, பாமக விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக இருந்த மயிலம் சிவக்குமார் நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். அவருக்கு பதிலாக புகழேந்தியை நியமித்தார்.
இன்று நடைபெற்ற பாமக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக மயிலம் சிவக்குமாரே தொடர்வதாக அன்புமணி அறிவித்து அதற்கான கடிதத்தையும் அவரிடம் மேடையில் வைத்தே வழங்கினார்.

இந்தநிலையில், பாமக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் பச்சையப்பனை ராமதாஸ் நீக்கி, ஜோசுவாவை நியமித்துள்ளார். Anbumani appoints removed district secretaries of pmk
ராமதாஸ், அன்புமணி இடையே நடக்கும் இந்த மோதலால், மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவதும் உடனடியாக அவர்கள் மீண்டும் அன்புமணியால் நியமிக்கப்படுவதாக நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், “மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். யார் மாற்றப்பட்டாலும், அடுத்த பத்து நிமிடத்தில் நீங்கள் தான் கட்சியில் தொடர்வீர்கள் என்று கடிதம் வரும்” என்று அன்புமணி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Anbumani appoints removed district secretaries of pmk
