தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள கலைஞர் சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (மே 1) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷிடம், “கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறதா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். anbil mahesh says schools reopen

இதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ், “திருச்சி மாவட்டத்தில் 104 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம். அந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
“தனியார் பள்ளிகள் அட்மிஷனுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே” என்ற கேள்விக்கு,
“2009 முதல் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக ஒரு ஆணையத்தை அமைத்துள்ளோம். அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார். anbil mahesh says schools reopen
