தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 8-ஆம் தேதி வெளியானது. மாணவர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் 95.11 சதவிகிதம் ஆகும். இதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 முழு மதிப்பெண் பெற்றனர். anbil mahesh clarifies 167 students
ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது எப்படி என்று பலரும் சந்தேகம் எழுப்பினர். மேலும், இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கமளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
“மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றால் அந்த கிரெடிட்டை நீங்கள் எங்களுக்கு கொடுக்க மாட்டீர்கள். சந்தேகத்தோடு தான் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை பார்க்கிறீர்கள். நம் மாணவர்களை பற்றி நாம் எப்போதுமே பெருமையாக பேசுவதில்லை. ஆனால், மற்ற மாநிலங்கள் நம் மாணவர்களை பற்றி பெருமையாக பேசுகிறார்கள்.
முழு மதிப்பெண் பெற்ற பள்ளியில் கடந்த ஆண்டு படித்த மாணவர்கள் எவ்வளவு மார்க் எடுத்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? கடந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் 104 மாணவர்கள் 90-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதனால் கடந்த ஆண்டு மாணவர்களையும் சந்தேகப்படுகிறீர்களா?
இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இயற்பியல், கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களிலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். அந்த பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளித்த பயிற்சியை மாடலாக எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழக பள்ளிகளுக்கும் அதனை செயல்படுத்த முயற்சிப்போம். anbil mahesh clarifies 167 students
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை 100 பேரிடம் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணை விவரங்களை விரைவில் வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.