பியூட்டி டிப்ஸ்: அனார்கலி ஆடையில் நீங்களும் அசத்தலாம்!

Published On:

| By christopher

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை அனார்கலி ஆடைகள் தற்போது மீண்டும் டிரெண்ட் ஆகியுள்ளன. பட்ஜெட் ஃபிரெண்ட்லியாக, அதே நேரம் உங்கள் உடல்வாகுக்குத் தகுந்த வகையில் உங்களுக்கான அனார்கலி ஆடையை எப்படி வடிவமைப்பது, எந்த இடங்களுக்கு, என்ன மாதிரியான அனார்கலி ஆடைகள் பொருத்தமாக இருக்கும்… எப்படி மிக்ஸ்- மேட்ச் செய்யலாம்…

“அனார்கலி ஆடைகளைப் பொறுத்தவரை `அம்ப்ரெல்லா கட்’, `ப்ளீட்டடு கட்’ மற்றும் `பேனல் கட்’ என மூன்று பேட்டர்ன்கள் இருக்கின்றன. மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு `ப்ளீட்டடு கட்’ அனார்கலியும், கொஞ்சம் பருமனாக இருப்பவர் களுக்கு `அம்ப்ரெல்லா கட்’ அனார்கலியும் பொருத்த மாக இருக்கும். `பேனல் கட்’டை எந்த உடல்வாகு கொண்டவர்களும் அணியலாம்.

ADVERTISEMENT

அனார்கலி ஆடையைத் தேர்வு செய்யும்போது அதன் உயரத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயரம் குறைவான பெண்கள், முழங்காலுக்கு கீழ் டாப் இருப்பது போன்றும், உயரமான பெண்கள் கணுக்கால் வரையும் அனார்கலியை வடிவமைத்துக் கொண்டால் நீட் லுக் கிடைக்கும். டிரெண்டியான லுக் வேண்டும் என்றால் யோக் பகுதியில் (மார்பகப் பகுதியில்) டிசைனர் மெட்டீரியல்கள், கலம்காரி, இக்கட் போன்ற பேட்டர்ன் மெட்டீரியல்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம். அதே டிரெடிஷனல் லுக் வேண்டும் என்பவர்கள் சில்க் காட்டன், காஞ்சி காட்டன், புரொகேட் மெட்டீரியல்களை பயன்படுத்தலாம். இண்டோ வெஸ்டர்ன் லுக் வேண்டும் என்றால் ஸ்லீவ்லெஸ் அனார்கலி டிசைன் செய்து அதன் மேல் ஓவர் கோட், ஓவர் லே போன்றவற்றை மிக்ஸ் மேட்ச் செய்யலாம்.

அனார்கலி ஆடையில் பெல்ட் அணிந்து கொள்வது தற்போது டிரெண்டில் உள்ளது. பெல்ட் அணிய விரும்புபவர்கள், அனார்கலிக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் மிக்ஸ் மேட்ச் செய்யலாம். பெல்ட் அணிந்து அதை ஹேண்டில் செய்வது சிரமம் என்று நினைப் பவர்கள் பெல்ட்டை ஆடையுடன் சேர்த்துத் தைத்து இறுக்கமாக ஃபிட் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

அலுவலக பயன்பாட்டுக்கு அனார்கலி வாங்குபவர்கள் முழங்கால் அளவு அனார்கலியை தேர்வு செய்தால் கையாள எளிதாக இருக்கும். பார்ட்டி போன்ற ஸ்பெஷல் நிகழ்ச்சிகளுக்கு அனார்கலியின் கீழ் பகுதியில் ரஃபில்கள் வைத்து டிசைன் செய்யலாம். கேஷுவல் லுக் பிரியைகள் ஃப்ளோரல் மெட்டீரியல் களில் அனார்கலியை வடிவமைக்கலாம். சிம்பிள் லுக்கில் கலக்க விரும்பினால், பிளெயின் சிந்தெடிக் மெட்டீரியலில் அனார்கலியை டிசைன் செய்து கான்ட்ராஸ்ட் நிறத்தில் துப்பட்டாவை மிக்ஸ் -மேட்ச் செய்யலாம். டிரெடிஷனல் லுக் விரும்புபவர்கள் உடல் பகுதிக்கு காட்டன் மெட்டீரியலை தேர்வு செய்து பார்டர் பகுதி யில் பெரிய ஜரி பார்டர் வைத்து டிசைன் செய்து கொள்ளலாம்.

சிந்தெட்டிக் மற்றும் டிசைனர் மெட்டீரியல்களுக்கு டிரான்ஸ்பரன்ட் ஸ்லீவ்ஸ் பெஸ்ட் சாய்ஸ். ஜரி பகுதியை கைகளுக்கு வைக்க விரும்புபவர்கள் த்ரீ ஃபோர்த் ஸ்லீவ்ஸ் முயற்சி செய்யலாம். ஃபுல் ஸ்லீவ்ஸ் வேண்டும் என்பவர்கள் மணிக்கட்டு பகுதிக்கு மட்டும் ஜரி பார்டர் வைத்துத் தைத்தால் நீட்டாக இருக்கும்” என்கிறார்கள் ஆடை வடிவமைப்பாளர்கள்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : கரையை கடக்கும் டாணா புயல் முதல் INDvsNZ 2வது டெஸ்ட் போட்டி வரை!

4 மாநிலங்கள்… 29 செல்போன் டவர் கொள்ளையர்கள்… தமிழ்நாடு போலீஸின் ‘பான் இந்தியா’ ஆபரேஷன்!

ஒரே அணிக்காக விளையாடிய தந்தை, மகன்… என்.பி.ஏ.வில் லெப்ரான் சாதனை!

ராக்கெட் டிரைவர் : விமர்சனம்!

தனிநபர் வருமானம் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகம்: எப்படி?

Anarkali dresses are now back in trend

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share