ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண கொண்டாட்டம் : ஜாம்நகரில் குவியும் உலக பிரபலங்கள்!

Published On:

| By christopher

Anand Ambani Radhika Wedding

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்க்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இவர்களது திருமணத்தை முன்னிட்டு 3 நாள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் ஜாம்நகர் பகுதியில் உள்ள அம்பானியின் எஸ்டேட்டில் இன்று (மார்ச் 1) மாலை முதல் தொடங்க உள்ளது.

அதற்கு முன்னதாக பாரம்பரிய முறையில் நேற்று அங்குள்ள உள்ளூர்வாசிகள் 51,000 பேருக்கு அன்ன சேவா என்ற பெயரில் விருந்து பரிமாறப்பட்டது. இதில் அம்பானி குடும்பத்தினரே மக்களுக்கு தங்களது கைப்பட உணவு பரிமாறினர்.

அதன் தொடர்ச்சியாக இன்று  மாலை ‘An Evening in Everland’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளுடன் ஆடல் பாடல் கொண்டாட்டங்கள் அரங்கேற இருக்கின்றன.

அதற்காக உலக அளவில் உள்ள பிரபல நிறுவனங்களின் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் இந்தியாவின் பிரபல நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் பலர் ஜாம் நகருக்கு இன்று காலை முதல் வருகை தர தொடங்கியுள்ளனர்.

இதுவரை ஜாம்நகரில் குவிந்துள்ள பிரபலங்களின் பட்டியல் இதோ!

மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான்

அடோப் சிஇஓ சாந்தனு நாராயண்

இசைக்கருவி கலைஞர் ஆடம் பிளாக்ஸ்டோன்

பாப் பாடகி ரிஹானா அவருடைய பார்ட்னர் ராக்கி

ஷாருக்கான் குடும்பத்தினர்,

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே

அஜய் தேவ்கன் மற்றும் கஜோல்

இயக்குநர் அட்லி மற்றும் பிரியா

Anand Ambani Radhika Wedding

அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன்

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்

ரன்வீர் கபூர் மற்றும் அலியா பட்

சல்மான் கான்,

அர்ஜூன் கபூர்,

அமீர்கான்,

ராணி முகர்ஜி,

தயாரிப்பாளர் போனி கபூர்

தயாரிப்பாளர் அயன் முகர்ஜி

விக்கி கெளசல்

Anand Ambani Radhika Wedding

கிரிக்கெட் வீரர் பிராவோ

சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே,

மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்னாவிஸ் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் ஆகியோர் ஜாம் நகர் வந்துள்ளனர்.

இதுதவிர விருந்தினர்கள் பட்டியலில் கோடீஸ்வரர்களான பில் கேட்ஸ், கௌதம் அதானி, குமார மங்கலம் பிர்லா ஆகியோரும்,

உலக நாடுகளை சேர்ந்த கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, பூட்டான் ராணி ஜெட்சன் பெமா, சவுதி அராம்கோ தலைவர் யாசிர் அல், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் கிளாஸ் ஸ்வாப், பொலிவியாவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் குய்ரோகா மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட் போன்ற முக்கிய பிரபலங்களும் திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Anand Ambani Radhika Wedding

இதில் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் பாடுவதற்கு மட்டும் பாப் பாடகி ரிஹானாவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 52 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாக டெய்லி மெயில் இணையதளம் தெரிவித்துள்ளது.

மொத்தமாக கொண்டாட்டங்களுக்கு 120 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், சாப்பாட்டிற்கு மட்டும் 20 மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் குறிப்பிட்டு இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஸ்டாலினுக்கு சீன மொழியில் வாழ்த்து தெரிவித்த பாஜக

அதிமுகவினர் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share