சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்த சாரதி கோவிலில் இன்று (ஆகஸ்ட் 15) சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் – திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவருடன் அமைச்சர் உதயநிதி அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
உணவு சாப்பிட்டுவிட்டு வெளியில் கிளம்பும் நேரத்தில் அங்கிருந்த மூதாட்டி ஒருவர் உதயநிதியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மூதாட்டி, “என்னோட பையனுக்கு ரெண்டு காதுமே கேட்காது. ஆப்ரேசன் பன்ணுனாலும் காது கேட்காது.
ஒரு மெஷின் ஒன்னு கொடுத்தாங்க அது வொர்க் ஆகல. கொற கொறனு தான் கேட்குது. சும்மா டெம்ரவரியா தான் என் பையன் போட்டுட்டு வந்துருக்கான்.
நாங்க ரொம்ப கஷ்ட படுறோம். கணவரும் கெடையாது. ஒரு பையனுக்கு மனநலம் பாதிப்பு இருந்துச்சு அவன் சமீபத்துல தான் இறந்து போனான்.
நா இங்க தான் பாரதியார் வீட்டுக்கு பின்னாடி உள்ள பெரியாழ்வார் கோவில் தெருவுல உள்ள கோமுட்டி பங்களால இருக்கேன்” என்றவர், அமைச்சர் உதயநிதியிடம் வைத்த கோரிக்கையை பகிர்ந்து கொண்டார்” நா உதயநிதி சார் கிட்ட லெட்டர் கொடுத்துருக்கேன். திருப்பதி கோவில்ல என் வீட்டுகாரரு லட்டு புடிச்சாரு. 35 வருஷம் சர்வீஸ் அவருக்கு. பத்து பைசா கூட கொடுக்கல.
8 ல்ல இருந்து 10 பேருக்கு மூன்றரை லட்ச ரூபா கொடுத்து இருக்காங்க. எனக்காக executive officer கிட்ட நீங்க பேசி எதாவது உதவி பண்ணி கொடுங்க சார்னு கேட்டன். அதுக்கு அவருகண்டிப்பா செய்றேன்மா. இன்னொருத்தவர் இருக்காரு அவர்கிட்ட போன் நம்பர கொடுங்க. executive officer கிட்ட பேசி என்னால முடிஞ்ச உதவிய நா கண்டிப்பா பன்றேன்” னு சொன்னாரு. அமைச்சர்கிட்ட பேசுனது எனக்கு மனசு நிம்மதியா இருக்கு” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சுதந்திர தினவிழா: விருதுகள் வழங்கிய முதல்வர்!