மாமல்லபுரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.
இது குறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் இன்று (ஜனவரி 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
