மீண்டும் பயணத்தை துவங்கும் தினகரன்

Published On:

| By Balaji

விழுப்புரம் மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அந்த சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்துவந்தார்.

ADVERTISEMENT

அமமுக பதிவு செய்யப்பட்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தலையும் சந்தித்து கணிசமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. எனினும் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தினகரனை பொதுநிகழ்ச்சிகள் எதிலும் பார்க்க முடியவில்லை. பொங்கலுக்குப் பிறகு நிர்வாகிகள் இல்ல சுப, துக்க நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொண்டு வந்தார். இந்த நிலையில் தனது பயணத்தை தற்போது மீண்டும் துவங்கியுள்ளார் தினகரன்.

இதுதொடர்பாக அமமுக தலைமைக் கழகம் இன்று (பிப்ரவரி 8) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஜெயலலிதாவின் திருஉருவத்தையும், மக்கள் நலக் கொள்கைகளையும் இதயத்தில் ஏந்தி, லட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 17-02-2020 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் திண்டிவனம், டிகேபி திருமண மகாலில் நடைபெற உள்ளது.கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், “இக்கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**த.எழிலரசன்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share