டிஜிட்டல் திண்ணை: விஜய்யுடன் அமமுக கூட்டணி.. தினகரனின் 10 எம்.எல்.ஏக்கள் ‘டார்கெட்’!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ”காலம்தான் எத்தனை விசித்திரமானது” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

யாருக்கு காலம் மாறிப் போச்சாம்?

ADVERTISEMENT

தினகரனின் அமமுக கட்சி நிலவரத்தை சொல்றேன்.. 2021 சட்டமன்ற தேர்தலில அமமுக தலைமையில ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டு அதுல தேமுதிக உட்பட 7 கட்சிகளும் இருந்துச்சு.. எலக்‌ஷனுல அதிமுகவுக்கு பல தொகுதிகளில்ல பயத்தை காட்டியது அமமுக.

அதுக்கு பிறகு பாஜக கூட்டணியில அமமுக இணைஞ்சது.. ஆனா2026 தேர்தலுக்கு இபிஎஸ்ஸை சிஎம் வேட்பாளராக ஏற்கவே முடியாதுன்னு சொல்லிட்டு அந்த கூட்டணியில இருந்து தினகரன் வெளியேறிட்டாரு..

ADVERTISEMENT

அதனால தினகரன், விஜய் கூட்டணிக்கு போகத்தான் வாய்ப்புன்னு சொல்லப்பட்டது..அப்ப கூட, ”என் தலைமையில கூட்டணி அமைச்சவங்க நாங்க.. அவரு (விஜய்) நானே முதல்வர் வேட்பாளர்னு சொல்றாரு.. அதனால எப்படி அவங்க கூட கூட்டணி வைக்க முடியும்”ன்னு தினகரன் சொல்லி இருந்தாரு..

இதுக்கு இடையில பாஜக அணிக்கே தினகரன் மீண்டும் திரும்பவும் சான்ஸ் இருக்குன்னு சொன்னாலும்.. அப்படி எதுவும் நடக்கிற மாதிரி தெரியலை..

ADVERTISEMENT

இப்ப செங்கோட்டையனே, ஓப்பனாக விஜய்யுடன் தினகரன் பேசிகிட்டுதான் இருக்காரு என உண்மையை போட்டுடைச்சுட்டாரு…

இதைபத்தி தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசுனப்ப, ”விஜய்கூட பேச்சுவார்த்தை நடந்துகிட்டுதான் இருக்கு.. விஜய் தரப்புல, காங்கிரஸ் கட்சி எப்படியும் நம்ம பக்கம் கூட்டணிக்கு வந்துரும்.. அவங்க வந்த பிறகு விரிவாக பேசிக்கலாம்னு சொல்லியிருக்காங்க..

தினகரனைப் பொறுத்தவரைக்கும் போன தேர்தலில் பல தொகுதிகளில் 30,000 முதல் 40,000 ஓட்டு வரைக்கும் வாங்கி இருந்தோம்.. இப்ப விஜய் கட்சிகூட கூட்டணி வெச்சிட்டா குறைஞ்சது 10 இடத்துல ஜெயிக்க முடியும்.. நமக்கு அதுவே போதும்..

விஜய்கூட கூட்டணிங்கிறது எலக்‌ஷனில ஓட்டுப் போட்டு முடியறவரைக்கும்தான்.. அதுக்கு பிறகு என்ன நடக்குதோ அதுக்கு தகுந்த மாதிரி முடிவெடுக்கலாம்.. இப்போதைக்கு விஜய் கூட கூட்டணி வைப்போம்னு” கட்சி சகாக்களிடம் தெளிவா சொல்லிவிட்டே காய் நகர்த்துறாரு”என சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share