கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் கறிவேப்பிலை பானம்

Published On:

| By admin

கோடைக்கேற்ற காயகல்பம் இந்த நெல்லிக்காய் கறிவேப்பிலை பானம். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்; ரத்தக் கொதிப்பைச் சீராக்கும். புற்றுநோயைத் தடுக்கும். ரத்தச் சோகையை விரட்டும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி-யும், கறிவேப்பிலையில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளதால் அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

  • பெரிய நெல்லிக்காய் – 2
  • கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
  • வறுத்துப் பொடித்த ஆளிவிதைப் பொடி – கால் டீஸ்பூன்
  • தேன் (விரும்பினால்) – ஒரு டீஸ்பூன்
  • தண்ணீர் – 200 மில்லி.

எப்படிச் செய்வது?

நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் ஆளிவிதைப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இதைக் காலை, மாலை என இருவேளையும் 100 மில்லி பருகலாம். விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துப் பருகலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share