அமித்ஷா எடப்பாடி சந்திப்பு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பதில் அளித்துள்ளார்.amitshah eps meeting ops reaction
இனி எப்போதும் பாஜவுடன் கூட்டணி இல்லை என கூறி வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.
அமித்ஷாவை சந்திப்பதற்கு முன்னதாக தலைவர்கள் யாரையும் சந்திக்க வரவில்லை. கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளேன் என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்த பிறகு மக்கள் நலனுக்காக சந்திக்க வந்தேன்.சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும் என்று கூறினார்.
இந்தநிலையில் இன்று (மார்ச் 26) சென்னையில் சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் அமித்ஷா எடப்பாடி சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, இது எல்லோருக்கும் பொதுவான கேள்விதானே என்று கேட்ட பன்னீர் செல்வம், எல்லாம் நன்மைக்கே… வாங்க… வழிவிடுங்க… என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
முன்னதாக, அதிமுக பாஜகவோடு இணைவதுதான் சரி. நானும் என்,டி.ஏ.வில் தான் இருக்கிறேன் என்று ஓபிஎஸ் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. amitshah eps meeting ops reaction