தேசிய இந்தி தினத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதி தேசிய இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. ஆகையால் தேசிய இந்தி தினத்திற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“இந்தி மொழி இந்தியாவிற்கு உலகமெங்கும் சிறப்புப் பெருமை மற்றும் மரியாதையைச் சேர்த்துள்ளது. அதன் எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் உணர்திறன் எப்போதும் ஈர்க்கத்தக்கதாக உள்ளது.
இந்தி திவாஸ் அன்று, அதைச் செழுமையாகவும், அதிகாரமளிக்கவும் அயராது பங்காற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“இந்தி தேசத்தை ஒற்றுமையின் இழையில் இணைக்கிறது. இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். இந்தி மொழி உட்பட அனைத்து உள்ளூர் மொழிகளின் வளர்ச்சிக்கு மோடி அரசு உறுதி அளித்துள்ளது.
இந்தியைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் பங்காற்றிய அனைவரையும் நான் வணங்குகிறேன். அனைவருக்கும் இந்தி திவாஸ் நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
