தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, யாதவர் பேரவை, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து, இந்த வார இறுதிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட தீர்மானித்துள்ளனர். கூட்டணி வலுவாக இல்லாவிட்டாலும், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதன் மூலம் பாஜகவை வலுப்பெற செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஏப்ரல் 13-ம் தேதி பாஜக தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை தருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருகையின்போது, பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்ய பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்துவருகிறது.