மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Amit Shah supporters warm welcome in Madurai
மதுரையில் இன்று (ஜூன் 8) நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஜூன் 7) டெல்லியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து சிந்தாமணி பகுதியில் உள்ள ஹோட்டலில் அமித்ஷா தங்கினார். இன்று காலை 11 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்.
மதுரை வருகை வருகையையொட்டி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில்,”தமிழ்நாட்டில் மதுரை வந்தடைந்தேன். நாளை திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு அமைப்பு நிகழ்ச்சிகளில் தமிழகத்தின் பாஜக துடிப்பான நிர்வாகிகளை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். Amit Shah supporters warm welcome in Madurai