புதுச்சேரியில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தமிழில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் மே 13-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலாளர் சரத் சவுகான், டிஜிபி ஷாலினி சிங் மற்றும் புதுச்சேரி மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். Amit Shah ordered FIR should be Tamil
அப்போது, காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள் தொடர்பான முக்கிய விதிகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து விவாதம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது,
“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைச் செயல்படுத்துவதில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. புதுச்சேரியில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தமிழில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். Amit Shah ordered FIR should be Tamil
தேவைப்படுபவர்களுக்கு பிற மொழிகளில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் கைரேகைகளும் தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பின் (என்.ஏ.எஃப்.ஐ.எஸ்) கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதனால் தரவுத்தளம் சிறப்பாகப் பயன்படுத்தப்படும். எந்தவொரு வழக்கிலும் சட்ட ஆலோசனை வழங்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும். மின்னணு சம்மன்கள் போன்ற விதிகள் விரைவில் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.
புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக, புதுவை தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் வாரத்திற்கு ஒரு முறையும், மாநில உள்துறை அமைச்சர் 15 நாட்களுக்கு ஒருமுறையும், துணை நிலை ஆளுநர் மாதத்திற்கு ஒருமுறையும் ஆய்வு செய்ய வேண்டும்” என்று அமித்ஷா தெரிவித்தார்.