திருச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று (ஜனவரி 4) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.இன்று (ஜனவரி 5) காலை திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து, மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் பங்கேற்றார். “நம்ம ஊரு மோடி பொங்கல் விழா” என்ற வாசகத்துடன் 1008 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற அமித் ஷாவிற்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவைத் தொடங்கி வைத்து அமித் ஷா மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவருடன் தமிழக பாஜக தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
