தமிழகம் வரும் அமித்ஷா… போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

Published On:

| By Kavi

தமிழகம் வரும அமித்ஷாவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன,

நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, இரண்டு பாஜக எம்.பி.க்களின் தலையில் அடிபட்டது.

இந்தநிலையில், அமித்ஷா வரும் டிசம்பர் 27ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருவார் என்றும் மறுநாள் டிசம்பர் 28ஆம் தேதி திருவண்ணாமலை சென்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்வார் என்றும் தொடர்ந்து அங்கு கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை திறந்து வைப்பார் என்றும் தகவல்கள் வருகின்றன.

இந்தசூழலில் செல்வப்பெருந்தகை தனது முகநூல் பக்கத்தில், “ வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும்.

ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்த் குருபூஜை… பாஜகவோடு இணைகிறதா தேமுதிக?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share