உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (ஏப்ரல் 10) இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தார்.
தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணியே வெற்றி பெறும் என்று கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே தான் பங்கு பெறும் பல நிகழ்ச்சிகளிலும் வெளிப்படையாக பேசி வருகிறார் அமித் ஷா. Amit Shah chennai visit important announcement
கடந்த மார்ச் 25ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அதன் பின் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இதன் முக்கிய விவரங்களை அமித் ஷாவிடமும் சமர்ப்பித்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியை உறுதி செய்வதற்காக அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்துள்ளார். 11. 30 மணிக்கு சென்னை வந்த அமித் ஷாவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், நயினார் நாகேந்திரன்,ஹெச்.ராஜா, பொன்னார், கருப்பு முருகானந்தம், வினோஜ், மீனவரணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் வரவேற்றனர்.
வரவேற்பைப் பெற்றுக் கொண்டு நள்ளிரவு 12 மணி வாக்கில் கி்ண்டியில் இருக்கும் ஐடிசி சோழா ஹோட்டலுக்கு சென்றார் அமித் ஷா. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அந்த ஹோட்டலுக்கே சென்று இரவு அங்கேயே தங்கினார்கள்.
இன்று காலை 10 மணி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளை சந்திக்கிறார் அமித் ஷா. Amit Shah chennai visit important announcement
இன்று பகல் 1.30 மணிக்கு ஐடிசி சோழா ஹோட்டலில் இருக்கும் தஞ்சாவூர் ஹால் எனப்படும் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் அமித் ஷா. மதிய விருந்துடன் கூடிய இந்த சந்திப்பின் போது கூட்டணி பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் அமித் ஷா என்கிறார்கள்.