ஈஷாவில் அமித்ஷா… பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Published On:

| By vanangamudi

ஈஷா மகா சிவராத்திரி விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ள நிலையில், சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். Amit Shah at Isha heavy police security

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26) 31-ஆவது மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைத் தந்துள்ளார்.

ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், திரைபிரபலங்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

நடிகர்கள் சந்தானம், தமன்னா, விஜய் வர்மா, திரைப்பட இயக்குனர் ஓம் பிரகாஷ் மெஹ்ராவும் ஈஷாவுக்கு வந்துள்ளனர்.

வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் விஐபிகள் வருகைத் தந்துள்ளனர். இந்தநிலையில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கோவை சென்று பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகிறார். இதுதொடர்பாக நேற்று இரவே போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், கோவை மாநகரிலும் ஈஷா மையத்திலும் பாதுகாப்பை பலபடுத்தியுள்ளார்.

ஐஜி, டிஐஜி, 5 எஸ்.பி.க்கள் உட்பட சுமார் 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் வரவழைக்கப்பட்டனர்.

இதுமட்டுமின்றி ஈஷா வரும் அனைவருக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.Amit Shah at Isha heavy police security

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share