அண்ணாமலை நடைபயணத்தை துவக்கி வைத்தார் அமித்ஷா

Published On:

| By Selvam

amit shah annamalai en mann en makkal padayatra

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று துவங்கி வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவை பலப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை இன்று முதல் நடைபயணம் மேற்கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டணிகள் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்,  தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய கல்வி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் புதிய நாடாளுமன்றம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள துவக்க விழா மேடைக்கு மாலை 6.15 மணிக்கு அமித்ஷா வந்தார். அண்ணாமலை கையை பிடித்து அமித்ஷா உயர்த்தினார். அப்போது பாஜக தொண்டர்கள் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் அமித்ஷா பேசினர். பின்னர் நடைபயணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக வாகனத்தில் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

செல்வம்

சேலத்தில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த பாமகவினர்!

பாமகவினர் மீது காவல்துறை தடியடி: வேல்முருகன் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share