ஜூன் 5 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை தேர்வு செய்திருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், குமாரசாமி, ஏக் நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து குடியரசுத் தலைவரை சந்திப்பது , இந்தியா கேட் பகுதியில் மூன்றாவது முறையாக பதவியேற்பு விழா நடத்துவது என்று பாஜக தரப்பில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் மோடி மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கத் தயங்கியிருக்கிறார்.
400 சீட்டுகள் என்று முழக்கத்தை முன் வைத்து மோடியை முன்னிறுத்தியே தேர்தல் களத்தை எதிர்கொண்ட நிலையில் பாஜகவுக்கு 240 தொகுதிகள்தான் கிடைத்துள்ளன. இதனால் மோடி கடுமையாக அப்செட் ஆகிவிட்டார்.
மோடி மீண்டும் தான் பிரதமராக பதவியேற்பதற்கு முதலில் பெரிதும் தயங்கியிருக்கிறார். தேர்தல் முடிவுகள் ஜூன் 4 பிற்பகலிலே கிட்டத்தட்ட தெளிவாகிவிட்ட நிலையில், பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்துக்கு வருவதற்கு கூட யோசித்திருக்கிறார் மோடி.
ஆனால் மோடியின் முடிவை அமித் ஷா ஏற்கவில்லை. நேற்று அமித் ஷா மோடியிடம் இதுகுறித்து நீண்ட நேரம் ஆலோசித்திருக்கிறார்.
அப்போது அமித் ஷா, ‘உங்க பாதுகாப்புக்காக அதாவது உயிர் பாதுகாப்புக்காகவும் அரசியல் பாதுகாப்புக்காகவும் நீங்கள் பிரதமராக தொடர்வது அவசியம்’ என வலியுறுத்தியிருக்கிறார். அதன் பிறகே மோடி நேற்று இரவு 8 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்தார் என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரங்களில்.
இதன் தொடர்ச்சியாகத்தான் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்திலும் மோடி பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
நாம் தமிழரை விட குறைவாய் அதிமுக… அப்செட் எடப்பாடி… அதிரடி மாற்றங்கள்!
நிதிஷ், நாயுடு தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்
Comments are closed.