இருபது ஆண்டுகளைக் கடந்த அமீரின் ‘ராம்’

Published On:

| By uthay Padagalingam

Amir Ram movie has passed 20 years

அமீர் எனும் இயக்குனரைத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் ‘மௌனம் பேசியதே’. Amir Ram movie has passed 20 years

அது கல்லூரி செல்லும் தலைமுறையினரில் சிலரை மட்டுமே ஈர்த்தது. ஆனால், ‘யார் இவர்’ என்று பெரும்பாலான ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தும் விதமாக அமைந்தது ‘ராம்’.

ADVERTISEMENT

நடிகர் ஜீவாவை வித்தியாசமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கிற நாயகனாக மாற்றியது; ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘அலை’ வழியாக அம்மா பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய சரண்யாவை ரசிகர்கள் ஆராதிக்கத் தொடங்கிய படமாகவும் அது அமைந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஹ்மானை நாம் ரசிக்கக் காரணமானது. ‘ஜெமினி’யில் பார்த்த நடிகர் முரளியை, நகைச்சுவை பாத்திரத்தில் முதன்முறையாக நடித்த கஞ்சா கருப்புவைக் கொண்டாடச் செய்தது. Amir Ram movie has passed 20 years

ADVERTISEMENT

அனைத்துக்கும் மேலே, ‘கமர்ஷியல் பார்முலா’வுக்குள் அடங்காத திரைக்கதைகளிலும் யுவன் சங்கர் ராஜா மேஜிக் நிகழ்த்துவார் என்று உணர்த்திய படம் ‘ராம்’.

அப்படிப்பட்ட இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் ஆகின்றன.

ADVERTISEMENT

ஜீவாவின் முதல் ‘ஹிட்’! Amir Ram movie has passed 20 years

Amir Ram movie has passed 20 years

’ஆசை ஆசையாய்’, ’தித்திக்குதே’ படங்களின் வழியே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இரண்டு படங்களுமே பெரிய ஹிட் ஆகவில்லை என்பதால், மூன்றாவது படம் அப்படியொன்றாக அமைய வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக, தந்தையின் ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தில் நிறைய புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.

இயக்குனர்கள் சொல்லும் கதைகளைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, அவை விஷுவலாக எப்படி இருக்கும் என்று யோசிப்பது சில நடிகர்களின் வழக்கம். அதற்குப் பதிலாக நேரடியாகத் தனக்குத் தெரிந்த ஒளிப்பதிவாளர்களிடமே ‘நல்ல கதை ஏதாவது இருக்கா’ என்று கேட்கும் வழக்கமுடையவர் நடிகர் ஜீவா. Amir Ram movie has passed 20 years

அப்படி ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ஜீவா கேட்ட கேள்வியே, அவருக்கு ‘ராம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. Amir Ram movie has passed twenty years

‘மௌனம் பேசியதே’ எனும் வித்தியாசமான ஹிட் படத்தை மட்டுமே கொடுத்தவர் இயக்குனர் அமீர். தான் இயக்கும் இரண்டாவது திரைப்படத்தைப் பெரிய ஹிட் ஆக்கி காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதேநேரத்தில், அதில் தனக்கென்று தனித்துவமான பாணி தெரிய வேண்டும் என்றும் மெனக்கெட்டார்.

அந்த நேரத்தில் ஜீவாவை அழைத்துக்கொண்டு ராம்ஜி வர, ராம் படத்தின் கதையை அவரிடத்தில் கூறியிருக்கிறார் அமீர். கேட்டவுடனேயே, ‘இப்படியொரு கதையில் தன்னால் நடிக்க முடியுமா’ என்று மிரண்டிருக்கிறார் ஜீவா.

அது மட்டுமல்லாமல், ஒரு கதாபாத்திரமாகவே உருமாறி நிற்கும் ‘மெத்தேட் ஆக்டிங்’ மீது ஜீவாவுக்குப் பெரிய விருப்பம் ஏதும் இல்லை. ஆனால், விதி வலியது. அது, அவரை ‘ராம்’ படத்திற்காகச் சில மாதங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வைத்தது.

அது மட்டுமல்லாமல், படப்பிடிப்பில் நேரிட்ட கால தாமதங்கள் தாயாக நடித்த சரண்யாவுடன் ஜீவா நட்பு பாராட்ட வகை செய்தது. அந்த காலகட்டத்தில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் தெளிவாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு இருவரும் ‘பர்சனல்’ தகவல்களைப் பகிர்ந்திருக்கின்றனர். அதுவே, ‘தாய் – மகன் பாசம்’ ஆகத் திரையில் திறம்பட வெளிப்பட்டது. படத்தின் யுஎஸ்பி ஆகவும் அமைந்தது.

தயாரிப்பில் நேரிட்ட கால தாமதத்திற்குப் பிறகு ஒருவழியாக தியேட்டர்களில் வெளியானது ’ராம்’. வசூலில் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் தேசிய, சர்வதேச அளவில் சில விருதுகளை அள்ளியது  நாம் அறிந்ததே. Amir Ram movie has passed 20 years

செறிவுமிக்க உள்ளடக்கம்! Amir Ram movie has passed 20 years

Amir Ram movie has passed 20 years

ஒரு நடுத்தர வயதுப் பெண் கொலையாகிக் கிடக்கிறார். அவர் ஒரு கல்லூரி ஆசிரியை. அக்கம்பக்கத்தார் தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்துகின்றனர். அவரது சடலத்தின் அருகே இன்னொரு சடலம் கிடப்பதைக் காண்கின்றனர். அவர், அந்த பெண்ணின் மகன்.

கூரையைப் பெயர்த்துக்கொண்டு, போலீசார் வீட்டின் உள்ளே நுழைந்து பார்க்கின்றனர். அங்கு, அந்த மகன் உயிரோடு இருக்கிறார். அவர் கையில் கத்தி இருக்கிறது. அவரைக் கைது செய்கின்றனர்.

உடனே, ’தாயைக் கொன்ற மகன்’ என்ற தலைப்புச் செய்தி பத்திரிகைகளில் இடம்பெறுகிறது.

’ஏன் உனது தாயாரைக் கொன்றாய்’ என்று போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர். அதற்கு அந்த இளைஞன் பதிலேதும் சொல்வதில்லை.

அதையடுத்து, அந்த இளைஞனை நன்கு தெரிந்த, அவர் பழகிய சில மனிதர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அதன் வழியே, அந்த இளைஞன் குறித்த சித்திரம் நம் மனதில் மெதுவாக உருவெடுக்கிறது. Amir Ram movie has passed 20 years

தாய் பாசத்தை மலையெனக் கொண்டிருக்கும் அந்த இளைஞன், ஏன் அவர் மீது கொலை வெறி கொள்ளப் போகிறார்? அந்தக் கேள்வி உருவெடுக்கும்போதே, தனது தாயை அவர் கொல்லவில்லை என்பது பார்வையாளரான நமக்குத் தெரிய வருகிறது.

அப்படியானால், ஏன் அந்தப் பெண் கொல்லப்பட்டார்? தாயைக் கொன்ற நபரை அந்த இளைஞன் அறிந்தாரா? அதன்பிறகு என்னவானது என்பது உட்படப் பல கேள்விகளுக்கு முடிச்சுகளை ஒவ்வொன்றாக விடுவிப்பது போன்று பதிலளிக்கிறது ‘ராம்’ படத்தின் மீதி.

ஒரு கொலை விசாரணை பாணியில் திரைக்கதையின் பெரும்பாலான காட்சிகள் இருக்க வேண்டும். அவற்றில் முக்கால்வாசி காட்சிகளில் அந்த மகனைக் கொலைகாரனாகக் காட்ட வேண்டும். மாறாக, அவர் தன் தாய் மீது கொண்டிருந்த அதீத பாசமும் ரசிகர்களுக்குப் பிடிபட வேண்டும்.

திரைக்கதையில் இந்த சவாலைச் சமாளிக்கக் கஷ்டப்பட்டதாகச் சில பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் அமீர்.

ஒருமுறை திருச்சிக்குச் சென்றபோது, கேபிள் டிவியில் ‘போதைப்பொருள் வாங்கப் பணம் தராததால் தாயைக் கொன்ற மகன்’ என்ற செய்தியைக் கண்டிருக்கிறார் அமீர். அதனை ஒரு திரைப்படத்திற்கானதாக யோசித்தபோது, ‘ராம்’ கதை மனதில் உருப்பெற்றதாகச் சொல்லியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கிறது.

கே.ஜே.யேசுதாஸ் பாடிய ’ஆராரிராரோ’ பாடல் இப்படத்தின் முகவரியாக அமைந்தது. இது போக ‘விடிகின்றன பொழுது’ பாடலும் சரி; அதன் இன்னொரு வடிவமாக விளங்கும் ’நிழலினை நிஜமும் பிரிந்திடுமா’ பாடலும் சரி; நாயகன் உடனான பிரிவை இரு வேறு பாத்திரங்கள் வெளிப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருக்கும். ஒருவர் அவரது தாய், இன்னொருவர் காதலி என்பதுதான் அப்பாடல்களின் சிறப்பு.

நாயகியாக நடித்த கஜாலாவை ரசிகர்களுக்குக் குதூகலத்துடன் அறிமுகப்படுத்துகிற வகையில் ‘பூம் பூம்’ பாடல் இருந்தது என்றால், நாயகன் ஜீவா உக்கிர தாண்டவமாடுவதைக் காட்டுவதாக ‘மனிதன் சொல்கின்றன நியாயங்கள் என்ன’ பாடல் அமைந்திருந்தது. இது போக ‘யாரோ அறிவால் விதிதான் அறிவாரோ’ பாடல் இப்படத்தின் கிளைமேக்ஸை முன்னரே அறிவிப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.

படத்தின் கதை கண் முன்னே நிகழ்வதாக உணர வைத்த ராம்ஜியின் ஒளிப்பதிவு, த்ரில்லர் கதைக்கான இறுக்கத்தை எந்த இடத்திலும் சரியவிடாத ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பு மற்றும் கலை வடிவமைப்பு, ஸ்டண்ட், ஒலிப்பதிவு என்று பல நுட்பங்கள் இயக்குனர் உருவாக்கிய கற்பனை உலகுக்கு உயிர் கொடுத்தன.

ஜீவாவை நல்ல நடிகர் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியது இந்தப் படத்தில் இருந்து தான்.

ரஹ்மான், சரண்யாவுக்கு அடுத்தடுத்து பல படங்கள் கிடைக்கக் காரணமானது ‘ராம்’.

முக்கியமாக, கஞ்சா கருப்பு எனும் நடிகரைப் பிதாமகனில் ஒரு காட்சியில் பார்த்தவர்கள், இப்படத்தில் அவரது மதுரை வட்டார வழக்கு உச்சரிப்பு கண்டு உருண்டோடிச் சிரித்தார்கள். இப்படத்தில் அமைந்த அவரது பாத்திர வார்ப்பே பின்னாட்களில் பருத்திவீரன், சற்குணம் படங்களில் வேறுவிதமாக வெளிப்பட்டது.

‘அறை எண் 305ல் கடவுள்’ உள்ளிட்ட சில படங்கள் வாய்த்தும், திரைப்படத் தயாரிப்பு, நாயக ஆசை என்று அந்த பிம்பத்தை வளர்த்தெடுக்காமல் போனார் கஞ்சா கருப்பு.

Amir Ram movie has passed 20 years

குணால் ஷா என்பவர் இப்படத்தில் வில்லனாகத் தோன்றியிருந்தார். அவரது நடிப்பும் கூட நன்றாகவே இருந்தது. ஆனால், அப்பாத்திரத்தை நிறைய ‘எக்ஸ்போஸ்’ செய்ய வேண்டாம் என்ற இயக்குனரின் எண்ணம், கதையில் அவருக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்கிறது. அது போன்ற சில லாஜிக் மீறல்களை மட்டுமே இப்படத்தில் காண முடியும்.

இருபதாண்டுகளைக் கடந்தபிறகும் ‘ராம்’ பலருக்கு விருப்பமான படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இப்படத்தில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானோர் இன்றும் திரையுலகில் இயங்கி வருகின்றனர். ஆனால், அவர்களது படைப்புகள் சீரான இடைவெளியில் வெளிவருவதில்லை. ஜீவா, அமீர் உள்ளிட்ட பலர் இதில் அடக்கம்.

ஏற்கனவே தந்த வெற்றிப்படத்தின் நினைவுகளோடு, இவர்கள் அனைவரும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இது போன்ற சிறப்பான வெற்றிகளை மென்மேலும் தர வேண்டும் என்பதே நம் விருப்பம். Amir Ram movie has passed 20 years

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share