பெண்ணாகவே வாழ்கிறேன்… பாலின விவகாரத்தில் சிக்கி தங்கம் வென்ற இமானே உருக்கம்!

Published On:

| By Selvam

பாலின பிரச்னைக்கிடையே, அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரீஸ் ஒலிம்பிக்கில் 66 கிலோ எடை பிரிவில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரீனாவுடன் அல்ஜீரிய வீராங்கனை இமானே மோதினார். இமானேவின் ஒவ்வொரு பஞ்ச்சுகளும் இடி போல இறங்க இத்தாலி வீராங்கனை கலங்கிப் போனார். மூக்குடைபட்ட நிலையில், 46வது விநாடியிலேயே போட்டியிலிருந்து விலகிய ஏஞ்சலா கரீனா, உயிருக்கு பயந்து தான் போட்டியில் இருந்து விலகியதாக கூறி அழுதார்.

இதனால், ஆணுக்குரிய டெஸ்டோஸ்டிரான் இமானேவுக்கு அதிகமாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. ஏற்கனவே, டெஸ்டோஸ்டிரான் அதிகமாக இருந்ததால் கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இமானே தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து,இமானேயின் பாலினம் குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்தது. ஆனால், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் போது, இமானே நிர்ணயிக்கப்பட்ட தரநிலையை எட்டியதால் இமானே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி பதில் அளித்தது.

இப்படி பல சர்ச்சைக்கிடையே இறுதி சுற்றில், சீன வீராங்கனையை இமானே சந்தித்தார். அரங்கத்தில் 25 வயதான இமானே, இறுதி சுற்றுக்காக களம் இறங்கிய போது, இமானே, இமானே என்று ரசிகர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். இறுதிச்சுற்றில் எதிர்பார்த்தது போலவே, யாங் லீயை 5- 0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இமானே தங்கத்தை வென்று அசத்தினார்.

இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் குத்துச்சண்டை பிரிவில் பட்டம் வென்ற முதல் அல்ஜீரிய வீராங்கனை என்ற பெருமை இமானேவுக்கு கிடைத்தது. முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் அல்ஜீரிய வீரர் ஹோசின் சோல்தானி தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்கு பிறகு, செய்தியாளர்களிடத்தில் பேசிய இமானே, ஒலிம்பிக் பதக்கத்துக்காக, தான் 8 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாகவும் தனது வெற்றியை ஜீரணிக்க முடியாமல் சிலர் பாலினம் குறித்த சர்ச்சையை எழுப்பியதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது உடலில் ஆணுக்குரிய டெஸ்டிரோடிரான் அதிகமாக இருப்பதாக சமூகவளைத்தளங்களில் பலரும் விமர்சித்ததை தாண்டி தான் இந்த வெற்றியை பெற்றிருப்பதாக இமானே குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் பெண்ணாக பிறந்து பெண்ணாகவே வாழ்வபள் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை யாங் லீ, இமானேவை வெகுவாக மதிப்பதாகவும் அவரிடத்தில் இருந்து குத்துச்சண்டை டெக்னிக்குகளை கற்றுக் கொண்டதாகவும் பெருந்தன்மையுடன் கூறினார்.

குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?

“சென்னை விமான நிலையத்தில் நிலங்கள் வீணடிப்பு” – மக்களவையில் தயாநிதி மாறன் காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share