‘இனி அமெரிக்காவின் ஆட்சிதான்’.. வெனிசுலாவை ஆக்கிரமித்த டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

Published On:

| By Mathi

Venezuela US

வெனிசுலா மீது தாக்குதல்கள் நடத்திய அமெரிக்கா இப்போது அந்நாட்டை ஆக்கிரமித்துவிட்டது. வெனிசுலாவில் சுமூக நிலைமை திரும்பும்வரை அமெரிக்காதான் ஆட்சி நடத்தும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஏ! அமெரிக்க ஏகாதிபத்தியமே! என்று தமிழ்நாட்டின் வாடிப்பட்டி, பண்ணைப்பட்டி தெருக்களில் நின்று கொண்டு இடதுசாரிகள் முழங்குவதை கிண்டலடிக்கிற ஜீவிகள் கண்களை அகலத் திறந்து நிகழ்வுகளை உன்னிப்பாக பார்க்க வேண்டிய தருணம்..

ADVERTISEMENT

அமெரிக்கா ஏகாதிபத்தியம் என்றால் என்ன? அமெரிக்கா ஏகாதிபத்தியம் என்னவெல்லாம் செய்யும்? என்பதற்கு வரலாறு நெடுக நிகழ்வுகள் ரத்த சாட்சியங்களாகவே இருக்கின்றன.. இப்போதைய காட்சி உலக சாட்சியமாக இருப்பது வெனிசுலா என்கிற தென் அமெரிக்கா நாடு.

எங்கே இருக்கிறது வெனிசுலா?

ADVERTISEMENT
  • தென் அமெரிக்காவின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது.
  • கரீபியன் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலை வடக்கே எல்லையாகக் கொண்டுள்ளது.
  • மேற்கில் கொலம்பியா
  • தெற்கில் பிரேசில்
  • கிழக்கில் கயானா நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
  • வெனிசுலாவின் தலைநகர் கராகஸ்.

வெனிசுலாவின் சிறப்புகள் என்ன?

  • உலகிலேயே இயற்கை வளங்களில் மிகவும் செழிப்பான நாடுகளில் ஒன்று.
  • பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிம வளம் கொண்ட நாடு.
  • வெனிசுலா பொருளாதாரத்தின் பெரும்பகுதி ஹைட்ரோகார்பன்களைச் சார்ந்தே உள்ளது.
  • இரும்புத் தாது, தங்கம், பாக்சைட், நிலக்கரி மற்றும் வைரம் கொட்டி கிடக்கும் தேசம்.
  • வெனிசுலா ஏற்றுமதியில் காபி மற்றும் கோகோ போன்ற விவசாயப் பொருட்களும் முக்கியப் பங்கு வகித்தன.

அமெரிக்கா தாக்குதலுக்கு முதன்மை காரணங்கள்:

ADVERTISEMENT
  • இடதுசாரி கோட்பாடுகளை வெனிசுலா பின்பற்றுவது; கியூபா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் வெனிசுலா நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பது.
  • உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் வளம் மற்றும் கனிம வளங்களைக் கொண்ட தேசம் வெனிசுலா.
  • போதைப் பொருள் பயங்கரவாவத தடுப்பு என்ற பெயரிலான அமெரிக்காவின் தன்னிச்சையான தலையீடு

அமெரிக்கா எப்படி தலையிட்டது?

  • வெனிசுலாவின் தற்போதைய அதிபர் ‘இடதுசாரி’யான நிக்கோலஸ் மதுரோ. இவரது அரசை சட்டவிரோதமானது என்கிறது அமெரிக்கா.
  • வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை இடைக்கால அதிபராக அமெரிக்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன என்கிறது.
  • வெனிசுலா மீது இடைவிடாத பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வந்தது.
  • கரீபியன் கடலில் அமெரிக்கா தனது கடற்படையைக் குவித்தது.
  • வெனிசுலாவின் கடலோரப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறி வெனிசுலா படகுகள் மீது அமெரிக்கா தன்னிச்சையாக தாக்குதல் நடத்தியது.

விஸ்வரூபமான ‘வெனிசுலா வேட்டை’யும் எதிர்ப்பும்

இத்தகைய அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் சர்வாதிகாரப் போக்கின் உச்சம்தான் தற்போது அரங்கேறும் பேரவலங்கள்.

  • ஜனவரி 3-ந் தேதி அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள், வெனிசுலாவின் முக்கிய நகரங்களில் பேரழிவை ஏற்படுத்தின.
  • அதிபர் மதுரோவை கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றியதாக அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
  • அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்கிறது வெனிசுலா அரசு,
  • ரஷ்யா, சீனா, ஈரான், கொலம்பியா மற்றும் கியூபா போன்ற நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை உடனடியாகக் கண்டித்துள்ளன.
  • வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அமெரிக்கா மீறுவதாகவும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன.
  • வெனிசுலாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

வெனிசுலா-அமெரிக்கா மோதல் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

  • 2023-24 ஆம் ஆண்டில் இந்தியா வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மீண்டும் தொடங்கியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், வெனிசுலாவிடம் இருந்து இந்தியாவின் சராசரி எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 63,000 முதல் 100,000 பேரல்கள் வரை அதிகரித்தது,
  • இது முந்தைய ஆண்டை விட 500% அதிகம்.
  • இந்தியாவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே கச்சா எண்ணெய் வர்த்தகம் மீண்டும் புத்துயிர் பெற்ற நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை கடுமையாகப் பாதிக்க வாய்ப்புள்ளது.
  • இது உலகளாவிய எண்ணெய் சந்தையில் விலையேற்றத்திற்கும், இந்தியாவில் எரிபொருள் விலைகள் உயர்வதற்கும் வழிவகுக்கலாம்.

இனி அமெரிக்காவின் ஆட்சி

மேலும், வெனிசுலா நாட்டை இனி அமெரிக்காதான் ஆட்சி செய்யும்; வெனிசுலாவில் சுமூக நிலைமை திரும்புவரை அமெரிக்காவின் ஆட்சியே தொடரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share